/* */

நாமக்கல் மாவட்டத்தில் அக்ரி கிளினிக் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் அக்ரி கிளினிக் அமைக்க விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் அக்ரி கிளினிக் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
X

நாமக்கல் மாவட்டத்தில் அக்ரி கிளினிக் அமைக்க விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை மூலம், 2021-22ம் நிதி ஆண்டில் தமிழக அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்த 54 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 முதல் 40 வயதிற்கு உட்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் அக்ரி கிளினிக்க துவக்க அனுமதி அளிக்கப்படும். அவர்கள் கம்ப்யூட்டர் அறிவும், வேளாண்மை தொடர்பான அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் திறனும் உள்ளவராக இருத்தல் வேண்டும். மாவட்டத்தில் 9 பேருக்கு, அதிகபட்சம் ரூ. 1 லட்சம் அரசு மானியத்துடன் அக்ரி கிளினிக் அமைத்தல் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களான காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல், வேளாண் கருவிகள் வாடகை மையம், மண் மற்றும் நீர் பாணீசோதனை மையம் அமைக்கவும் விண்ணப்பம் செய்யலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தொழில் முனைவோர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பத்துடன் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், ÷ பங்க்பாஸ் புத்தக நகல் மற்றும் விரிவான செயல்திட்ட அறிக்கையுடன் விண்ணப்பங்களை வரும் 25ம் தேதிக்குள், சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது சம்பந்தமான கூடுதல் விபரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அல்லது நாமக்கல், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்