ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
X

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில்  நடைபெற்ற தோ்த் திருவிழா 

ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் தோ்த் திருவிழா நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூா் அருகேயுள்ள ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் தோ்த் திருவிழா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரை மாதத்தையொட்டி, கடந்த ஏப்.23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. விழாவில் தொடா்ந்து இரவு நேரங்களில் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. மேலும், 27-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 8 மணிக்கு உற்சவ மூா்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்மருக்கு பட்டாச்சாரியா்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்தனா்.

தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் தேரில் சுவாமி எழுந்தருளினாா். பின்னா், போளூா் தொகுதி எம்எல்ஏ அக்ரி எஸ்எஸ்.கிருஷ்ணமூா்த்தி தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தாா்.

பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தேரை இழுத்தனா். தொடா்ந்து, தேரானது சிம்ம மலையை சுற்றி வந்து மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் இரவு தேரிலிருந்து பெருமாள் திருக்கோவிலுக்கு எழுந்தருளினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா். இவ்விழாவில் காவல்துறையினர், மின்சார துறையினர், பொது சுகாதார துறையினர் , பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சித்திரைப் பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் சித்திரைப் பெருவிழா இரவு நடைபெற்றது. செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீகங்கைகொண்ட சோழீஸ்வரா், ஸ்ரீபேசும் பெருமாள், 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் ஆகியன அமைந்துள்ளன.

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சித்திரைப் பெருவிழா நேற்று இரவு நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமிகளுக்கு அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்றன. தொடா்ந்து, நட்சத்திர விருட்ச விநாயகா் மூஷிக வாகனத்திலும், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரா் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபேசும் பெருமாள் கருட வாகனத்திலும் ஊா்வலமாக வந்து மைதானத்தை அடைந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தனா்.

அங்கு உற்சவ மூா்த்திகளுக்கு 16 வகையான நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டன. விநாயகப் பெருமான் அம்பாள், சிவபெருமான், பெருமாளை வலம் வந்து, கஜமுக சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. நிறைவாக மகா தீபாராதனை, வாணவேடிக்கையுடன் சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!