/* */

நாமக்கல் நகராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 55 டன் குப்பைகள் அகற்றம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் நகராட்சியில் 55 டன் எடையுள்ள குப்பைகளை நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் அகற்றினர்.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 55 டன் குப்பைகள் அகற்றம்
X

பைல் படம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் நகராட்சியில் 55 டன் எடையுள்ள குப்பைகளை நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் அகற்றினர்.

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. நகராட்சிப் பகுதியில் உள்ள 55 ஆயிரம் வீடுகளில், மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அனைத்து வீடுகளிலும், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தினசரி காலை நேரித்தில் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து, சேந்தமங்கலம் ரோடு, முதலைப்பட்டி, கொசவம்பட்டி பகுதிகளில் உள்ள கம்போஸ்ட் உரத்தயாரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இங்குள்ள நுண்ணுயிர் செயலாக்கும் மையங்களில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைய முன்னிட்டு, நாமக்கல் நகராட்சி பகுதியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் ஏராளமான பட்டாசுகளை வெடித்து குதூகலமாக கொண்டாடினர். இதனால் நகராட்சிப் பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் ரோடுகளில் பட்டாசு குப்பைகள் மலைபோல் குவிந்தன. இவற்றை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி, வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று நகராட்சி கம்போஸ்ட் குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் நகராட்சியில் தினசரி சுமார் 50 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, நகராட்சி குப்பை கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நகராட்சி பகுதியில், பொதுமக்கள் அதிக அளவில் பட்டாசுகள் வெடித்ததால், கூடுதலாக 5 டன் பட்டாசு குப்பைகள் சேகரிக்கப்பட்டன. ஏற்கனவே சேகரிக்கப்படும் 50 டன் குப்பைகளுடன் சேர்த்து, மொத்தமாக 55 டன் குப்பைகள் தூய்மைப்பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு நகராட்சி கம்போஸ்ட் உரக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On: 13 Nov 2023 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!