/* */

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல்

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 உள்ளாட்சி  பதவிகளுக்கு இடைத்தேர்தல்
X

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 உள்ளாட்சிப் பதவிகளுக்கு வருகிற ஜூலை 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டவுன் பஞ்சாயத்து, பங்சாயத்து யூனியன் மற்றும் கிராமப் பஞ்சாயத்துக்களில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்து வார்டு எண்.8 கவுன்சிலர் பதவி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு 4வது வார்டு கவுன்சிலர் பதவி, நாமகிரிப்பேட்டை பஞ்சாயத்து யூனியன், ஆயில்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர். எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், இளநகர் கிராம பஞ்சாயத்து 2வது வார்டு உறுப்பினர். மாவுரெட்டிபட்டி கிராம பஞ்சாயத்து 2வது வார்டு உறுப்பினர். எருமப்பட்டி பஞ்சாயத்து யூனியன், வடவத்தூர் கிராம பஞ்சாயத்து 2வது வார்டு உறுப்பினர். கபிலர்மலை பஞ்சாயத்து யூனியன், சிறுநல்லிக்கோயில் கிராம பஞ்சாயத்து 3வது வார்டு உறுப்பினர். மோகனூர் பஞ்சாயத்து யூனியன், ராசிபாளையம் கிராம பஞ்சாயத்து 9வது வார்டு உறுப்பினர். நாமகிரிப்பேட்டை பஞ்சாயத்து யூனியன், மத்துருட்டு கிராம பஞ்சாயத்து 5வது வார்டு உறுப்பினர். பள்ளிபாளையம் பஞ்சாயத்து யூனியன் ஓடப்பள்ளி அக்ரஹாரம் கிராம பஞ்சாயத்து 3வது வார்டு உறுப்பினர் மற்றும் தட்டாங்குட்டை பஞ்சாயத்து 11வது வார்டு உறுப்பினர், பரமத்தி பஞ்சாயத்து யூனியன் செருக்கலை பஞ்சாயத்து 9வது வார்டு உறுப்பினர், புதுச்சத்திரம் பஞ்சாயத்து யூனியன் கதிராநல்லூர் பஞ்சாயத்து 1வது வார்டு உறுப்பினர். ராசிபுரம் பஞ்சாயத்து யூனியன் மோளப்பாளையம் பஞ்சாயத்து 8வது வார்டு உறுப்பினர், சேந்தமங்கலம் பஞ்சாயத்து யூனியன் கொண்டமநாயக்கன்பட்டி பஞ்சாயத்து 8வது வார்டு உறுப்பினர், திருச்செங்கோடு பஞ்சாயத்து யூனியன் சிறுமொளசி பஞ்சாயத்து 4வது வார்டு உறுப்பினர் ஆகிய 16 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் மாநில தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் காலியாக உள்ள 16 உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் 20ம் தேதி துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 27ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 28ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் 30ம் தேதி மாலை 3 மணி. தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் ஜூலை 9ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை. வாக்கு எண்ணிக்கை ஜூலை 12ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கும். தேர்தல் சம்மந்தமான நடவடிக்கைகள் வருகிற ஜூலை 14ம் தேதி முடிவடையும்.

உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தலுக்கான நடத்தை விதிகள், தேர்தல் நடைபெறும் பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்து முழுவதும், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் முழுவதும் மற்றும் 13 கிராம பஞ்சாயத்துக்கள் முழுவதும் ஜூன் 18ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். மேற்படி பகுதிகளின் பொது இடங்களில் வேட்பாளர்கள் பெயரிலோ, கட்சிகளின் பெயரிலோ மற்றும் அதன் தொடர்பான அனைத்து விதமான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்வித விளம்பரத்தட்டிகளோ, விளம்பர போர்டுகளோ இருந்தால் அவற்றை நீக்க வேண்டும். அரசுக்கட்டிடம், தனியார் கட்டிட சுவர்களில் வேட்பாளர்கள் பெயரோ, கட்சிகள் பெயரோ அல்லது அதன் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தால், அவைகள் அனைத்தையும் மறைக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Jun 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  4. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  5. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  6. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!