/* */

குதிரைகள், ஜாக்கிகள் நலச்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

நாமக்கல் மாவட்ட குதிரைகள் மற்றும் ஜாக்கிகள் நலச்சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குதிரைகள், ஜாக்கிகள் நலச்சங்க  புதிய நிர்வாகிகள் தேர்வு
X

நாமக்கல் மாவட்ட குதிரைகள் மற்றும் ஜாக்கிகள் நலச்சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்ட குதிரைகள் மற்றும் ஜாக்கிகள் நலச்சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்ட குதிரைகள் மற்றும் ஜாக்கிகள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக வெங்கிடு என்கிற வெங்கடேசன், துணைத்தலைவராக வேலு, செயலராக அரசப்பன், துணை செயலராக பிரபு, இணை செயலராக ராஜ், பொருளராக விவேக் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். விழாக்காலங்களில் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவது, முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்குதல், ரேக்ளா பந்தயத்தின் போது விபத்து ஏற்பட்டால் பதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குதல் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர், ஆட்டோ மற்றும் ரேக்ளா சங்க நிர்வாகி வெங்கிடு (எ) வெங்கடேசன் கூறியதாவது:

குமாரபாளையம், பவானி இடையே குதிரை வண்டிகள்தான் கடந்த 30 ஆண்டுக்கு முன்பு பொதுமக்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில் ஆட்டோக்கள் வந்ததால் குதிரை வண்டிகள் இல்லாத நிலை ஏற்பட்டது. நான் ரேக்ளா போட்டிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கேற்று வெற்றிகள் பெற்று வருகிறேன். தமிழகத்தில் குதிரை வண்டிகள் எங்கும் இல்லை என்றே சொல்லலாம். அதனால் இங்குள்ள குதிரைகள் சவாரி பழக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ரேக்ளா பந்தயம் என்றால் சுமார் 15 கி.மீ. அளவிலாவது ஓடி, திரும்ப வந்து வெற்றி பெற வேண்டும். அப்படி ஓடுவதற்கு நமதூர் குதிரைகள் சரியானது அல்ல. இத்தனை ஆட்டோக்கள் இருந்தும் இன்றும் மைசூர், பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் குதிரைகள் பூட்டப்பட்ட சாராத் வண்டிகளில் பொதுமக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்த குதிரைகள் ஓடி, ஓடி உடல் இறுகி, எந்த போட்டிக்கும், எவ்வளவு தூர ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதனால் தற்போது ரேக்ளா போட்டிகளுக்கு அந்த பகுதிகளில் ஓடிக்கொண்டு இருக்கும் குதிரைகளை வாங்கி வந்து, பயிற்சி தருகிறோம். ஜல்லிக்கட்டு போல் ரேக்ளா போட்டியும் பாரம்பரிய விளையாட்டு தான். ஒரு குதிரையின் ஆயுட்காலம் 20 முதல் 22 ஆண்டுகள் வரை இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குதிரை ரேக்ளா சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

நாமக்கல் மாவட்ட ரேக்ளா சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு குமாரபாளையத்தில் நடைபெற்றது. இதில் தலைவராக சிங்காரவேல், துணை தலைவர் யுவராஜு, செயலராக பால்ராஜ், துணை செயலராக மோகன், பொருளராக பிரகாஷ், கவுரவத்தலைவராக மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்களாக மோகனூரை சேர்ந்த கிருபாகரன், ராசிபுரத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி, குமாரபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து ரேக்ளா பந்தயங்களுக்கும் சங்கத்திற்கு பந்தயம் நடத்தும் குழுவின் சார்பில் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும், மது அருந்தி விட்டு பங்கேற்கும் ஜாக்கிகளுக்கு சங்கத்தின் சலுகைகள் கிடைக்காது, அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது, போலீசார் அனுமதி இல்லாமல் நடைபெறும் பந்தயங்களுக்கு சங்கம் எவ்வித பொறுப்பேற்காது, சங்க உறுப்பினர்களின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை இயன்ற வரை சங்கம் செய்யும், என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் கவுன்சிலர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 25 Nov 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  6. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  9. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  10. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!