/* */

குமாரபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் அமைச்சர் ஆய்வு

Government School News -குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் அமைச்சர் ஆய்வு
X

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்.

Government School News -குமாரபாளையத்தில் கனமழை பெய்ததால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஓடையில் அதிகளவில் மழை நீர் சென்று கொண்டுள்ளது. மழையின் காரணமாக பள்ளியின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதை முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்.

மழையின் காரணமாக கத்தேரி ஏரியில் தற்போது நீர் நிரம்பியுள்ளது. இதனை பார்வையிட்ட தங்கமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, கன மழை காரணமாக அரசு ஆண்கள், பெண்கள் பள்ளியில் அதிக நீர் தேங்கியுள்ளது. கத்தேரி ஏரி நிரம்பியதால்தான் இங்கு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கத்தேரி ஏரி தனியாருக்கு சொந்தமானது. இங்குள்ள நீரை அகற்ற, உரிமையாளர்களிடம் அனுமதி கேட்டுள்ளோம். கலந்து பேசி முடிவு செய்து சொல்கிறேன் என்று கூறியுள்ளனர். ஏரியை சுற்றி விவசாய நிலங்களில் வெள்ளாமை வைத்து விட்டனர். அதற்கும் நஷ்ட ஈடு கொடுக்கிறோம் என கூறியுள்ளோம். அதற்காகத்தான் சங்ககிரி எம்.எல்.ஏ.வும் கூட வந்துள்ளார். எங்களது எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீட்டில் இந்த பணியை செய்ய உள்ளோம். நீர் வெளியேறும் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவை அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் அருகே உள்ள கோம்பு பள்ளம், ஆக்கிரமிப்பால் குறுகியதாக மாறியதால், கோம்புபள்ளத்தின் நீர் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் நுழைகிறது. இந்த தண்ணீர், கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட துளையின் வழியாக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுழைகிறது. மேலும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி சுற்றுச்சுவர் உடைப்பாலும் கோம்பு பள்ளம் நீர் நுழைகிறது. இங்கு குளம் போல் மழைநீர் தேங்கியதால் அதனை அகற்ற ஆர்.டி.ஓ. அறிவுறித்தினார். அதன்படி நகராட்சி தூய்மை பணியாளர்கள் தேங்கிய மழைநீரை அகற்றினர்.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் குளம் போல் தேங்கியது இது முதல் முறை அல்ல. 5வது முறை. இதனால் பள்ளிக்கு விடுமுறை கூட விட்டு உள்ளனர். அப்போது இந்த மழை நீர் அகற்ற வேண்டும் என்று யாருக்கும் தோணவில்லை. அது இரண்டு நாள் கழித்து தானாக வடிந்தது. மீண்டும் பெய்த மழையால் மீண்டும் மழைநீர் குளம் போல் தேங்கியது. இது குறித்து தினசரி நாளிதழ், சமூக ஊடகங்கள், என பல வழிகளில் வெளியானது. அப்போதெல்லாம் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட எந்த நிர்வாகத்தின் பார்வைக்கும் படவில்லையா? மாணவிகள் கழிப்பிடம் பகுதியில் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ளதால் சாலையில் போவோர், வருவோர் கிண்டல் செய்வதால், மாணவிகள் கழிப்பிடம் செல்லவே தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த சுவற்றின் உயரம் அதிகப்படுத்த வேண்டும் எனவும், பல வகைகளில் செய்தி வெளியானது.

இந்த சுவற்றின் உயரம் அதிகப்படுத்த வேண்டும், என்று பொதுப்பணித்துறைக்கு மக்கள் நீதி மய்யம் மகளிரணியினர் கடிதம் எழுதினால், நிதி பெற்று தாருங்கள், செய்து தருகிறோம், என்று பொறுப்பற்ற முறையில் பதில் கடிதம் எழுதும் அதிகாரிகள் உள்ளவரை இதற்கு தீர்வு ஏற்படாது. அந்த அதிகாரியை மாவட்ட நிர்வாகம் எத வகையிலும் கண்டிக்கவில்லை. அதனால் அவர்கள் இப்படி செயல்படுவதில் ஆச்சர்யம் இல்லை. வேறு எந்த அரசியல் கட்சியிலும் மகளிர் அணி இல்லையா? மகளிர் குழுக்கள் வெறும் கடன் வாங்கி வருமானம் பெருக்கத்தான் உள்ளனவா? அந்த குழுக்களில் ஒருவரது மகள் கூடவா இந்த பள்ளியில் படிக்க வில்லை? மனிதாபிமானம் இல்லாத இது போன்ற அக்கறை இல்லாத அதிகாரிகள் இருக்கும் வரை இதற்கு தீர்வு ஏற்படாது? மாவட்ட செயலரை வரவேற்க பல லட்சங்களை வாரி இறைத்து ஊர் முழுக்க தோரணம் கட்டி அழகு பார்த்த அரசியல் கட்சியினர், இந்த சுற்றுச்சுவர் விசயத்தில், மழைநீர் தேங்கும் விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

சங்ககிரி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், குமாரபாளையம் அ.தி.மு.க. நகர செயலர் பாலசுப்ரமணி, நகராட்சி கவுன்சிலர் பழனிச்சாமி, ஒன்றிய செயலர் குமரேசன், மாவட்ட கவுன்சிலர் செந்தில், முன்னாள் கவுன்சிலர்கள் அர்ச்சுணன், ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Oct 2022 7:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?