/* */

நாகையில் ஒ.என்.ஜி.சி. நிறுவன நுழைவு வாயில் முன் கிராம மக்கள் போராட்டம்

நாகையில் குடிநீர் கிடைக்காததால் ஒ.என்.ஜி.சி. நிறுவன நுழைவு வாயில் முன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நாகையில் ஒ.என்.ஜி.சி. நிறுவன நுழைவு வாயில் முன் கிராம மக்கள் போராட்டம்
X

ஒ.என்.ஜி.சி நிறுவன சுத்திகரிப்பு நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் பகுதியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

அங்கு, ராமநாதபுரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கொலப்பாடு, கமலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கடல் நீரை விட 10 மடங்கு உவர்ப்பு தன்மை கொண்ட கெட்ட உப்பு நீர் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவரப்படுகிறது. கொண்டுவரப்படும் கெட்ட உப்பு நீர் 1800 மீட்டர் அளவில் ராட்சத போர்வெல் மூலம் பூமிக்கடியில் செலுத்தப்படுகிறது.

இதனால், கோபுராஜபுரம், நரிமணம், குத்தாலம், திட்டசேரி, எராவான்சேரி, உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாரியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், நிலத்தடி நீரை மாசுபடுத்தும் ஒ.என்.ஜி.சி மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முன்பு கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாசு நீர் சுத்திகரிப்பு நிலைத்தை அகற்ற வேண்டும் என்றும், சீரான தூய்மையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிறுவனம் மற்றும் மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பெண்கள் உள்ளிட்டோர் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 24 Jan 2022 2:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!