/* */

தென்னையில் கருந்தலைப் புழுக்கள்... கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை!

தென்னையில் கருந்தலை புழுக்கள் மேலாண்மை செய்து, அதன் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியல் மைய தலைவரும், முதுநிலை விஞ்ஞானியுமான சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தென்னையில் கருந்தலைப் புழுக்கள்...    கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை!
X

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை மரங்களில் கருந்தலை புழுக்களின் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. பருவமழைகளுக்குப் பிறகு, வெயில் காலத்தில் கருந்தலைப்புழு தென்னையை அதிகமாக தாக்குகிறது. தாய்பூச்சிகள் மட்டைகளின் இடுக்குகளில் முட்டையிடும். புழுக்களின் தலைப்பாகம் கருப்பாக இருக்கும். தென்னை ஓலைகளில், இப்புழுக்கள் கழிவுப் பொருள்களையும், பசை நூலையும் கொண்டு செய்யப்பட்ட மெல்லிய நூலராம்படையினுள் இருக்கும்.

இதனை தடுக்க வளர்ந்த மரங்களில் ஒட்டுண்ணிகளை விடலாம். பெத்தலிட் என்ற புழுப் பருவத்தை தாக்கவல்ல ஒட்டுண்ணியை வாங்கி பாதிக்கப்பட்ட மரங்களில் விடுவிப்பதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம். ஒரு மடங்கு கருந்தலைப் புழுவிற்கு எட்டு மடங்கு ஒட்டுண்ணிகளை தென்னை மரத்தின் அடிபாகத்தில் தான் விட வேண்டும்.

மரத்தில் உள்ள காய்களை அறுவடை செய்தபின் ஊசி மூலம் மருந்து செலுத்தலாம். மரத்தில் தரையில் இருந்து 1.5 மிட்டர் உயரத்தில் 45 டிகிரி கோணத்தில் கீழ்நோக்கி இருக்குமாறு துவாரம் அமைத்து அதில் 5 மி.லி., மானோ குரோட்டா பாஸ் மருந்தை ஊசி மூலம் செலுத்தி பின் காப்பர் ஆக்ஸி குளோரைட் மருந்து கலந்த களிமண்ணால் துவாரத்தை மூடிவிடலாம்.

மானோகுரோட்டோபாஸ் 5 மி.லி., மருந்துடன், 20 மி.லி., தண்ணீர் கலந்தும் ஊசி மூலம் ஏற்றலாம். அல்லது 5 மி.லி., மருந்தை பஞ்சில் நனைத்து அதனை துவாரத்தில் வைத்தும் மூடிவிடலாம். இவ்வாறு மருந்து செலுத்திய பின் 40 நாட்களுக்கு இளநீரோ அல்லது தேங்காய்களோ கண்டிப்பாக பறித்தல் கூடாது.

புழுவின் தாக்குதல் அதிகமாக இருந்து அதனால் மரம் கடுமையான பாதிக்கப்படுவதுபோல் இருந்தால் மருந்தை வேர்மூலம் செலுத்தலாம். மரத்தின் அடியில் மண்ணை லேசாக தோண்டி நல்ல செயலுடைய புதுவேராக தேர்வு செய்து அதை சாய்வாக வெட்டி மரத்துடன் உள்ள வெட்டப்பட்ட வேரை மருந்து செலுத்த தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

மானோகுரோட்டோபாஸ் 10 மி.லி., மற்றும் 10 மி.லி., நீர் இவற்றை 7&10 செ.மீ., அளவுள்ள பாலிதீன் பையில் எடுத்துக் கொண்டு அதை ஏற்கனவே செய்துள்ள வேரில் நனையும்படி வைத்து நூல் கொண்டு நன்கு இறுக்கி கட்ட வேண்டும். 24 மணி நேரம் கழித்து கலவை முற்றிலும் உறிஞ்சப்பட்டிருக்கிறதா என்பதை சோதித்து, இல்லையெனில் வேறொரு வேரினை தேர்வு செய்து கட்ட வேண்டும். மேலும் விவரங்களுக்கு வேளாண் அறிவியல் மையத்தையோ அல்லது 8098280123 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Jun 2021 3:49 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...