/* */

திருமண மண்டபம், தியேட்டர்களில் கட்டுப்பாடு

திருமண மண்டபம், தியேட்டர்களில் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது என ஆர்டிஓ தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருமண மண்டபம், தியேட்டர்களில் கட்டுப்பாடு
X

கிருஷ்ணகிரியில் திருமண மண்டபங்கள், தியேட்டர்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் கற்பகவள்ளி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி தாசில்தார் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் உள்ள 37 திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள், தியேட்டர்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் போது, கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளதையும், அரசுகளின் வழிகாட்டுதல்களையும் விளக்கி கூறி, மண்டபங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே சமூக இடைவெளியுடன் பங்கேற்பது, தியேட்டர்களிலும், அரசு வழிகாட்டுதலின்படி, சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைப்பது, அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே அனுமதிப்பது, அனைவரும் முகக்கசவம் அணிவது, சானிடைசர், கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தி தருவது, தியேட்டர்களில் இடைவேளை நேரங்களில் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களை ஒளிபரப்புவது, அதே போல் 45 வயதிற்கு மேல் உள்ள பணியாளர்கள் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், மண்டபம் மற்றும் தியேட்டர்களில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவைகளையும் கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

Updated On: 18 April 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க