/* */

கரூரில் 100 சதம் ஊரடங்கு சாலைகள் வெறிச்சோடியது

கரூரில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று முழு ஊரடங்கு 100 சதம் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய பணிகள் வந்த ஒருசில வாகனங்களைத் தவிர பெரும்பாலும் கடை வீதிகள் சாலைகள் மக்கள் வசிக்கும் தெருக்களில் கூட காலியாக காணப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பிறப்பித்த முழு ஊரடங்கு இன்று கரூர் மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. கரூர் நகரம், வேலாயுதம்பாளையம், க. பரமத்தி, சின்னதாராபுரம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.

போலீசார் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் தடுப்புகளை அமைத்து அத்தியாவசிய பணிக்காக சென்ற நபர்களை தீவிர விசாரணைக்கு பிறகு. அனுமதித்தனர். தேவையில்லாமல் ஊர் சுற்றிய நபர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

இதனால் மாவட்டம் முழுவதும் முழுமையான ஊரடங்கு 100% கடைபிடிக்கப்பட்டது. தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட இலையில், இன்றைய தினத்திலும் அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருந்தன அனைத்து ரேஷன் கடைகளிலும் முன்னதாக டோக்கன் அளிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

Updated On: 16 May 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க