/* */

கரூரில் கொரோனா தடுப்பூசி மையத்தில் கூச்சல் குழப்பம் எஸ்பி சமாதானம்

கரூரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகமானோர் வந்ததால் தடுப்பூசி மையத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. போலீஸ் எஸ்பி சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்தார்.

HIGHLIGHTS

கரூரில் கொரோனா தடுப்பூசி மையத்தில் கூச்சல் குழப்பம் எஸ்பி சமாதானம்
X

  கரூர் நகராட்சிக்கு  உட்பட்ட பசுபதீஸ்வரர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தடுப்பூசி முகாமில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்ததால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

கரூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் அதிகாலையிலிருந்து வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் தடுப்பூசி கிடைக்காததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முகாமில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களை அமைதிப்படுத்தியதால் கலைந்து சென்றனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு சார்பில் கோவிசீல்டு மற்றும் கோவாக்சீன் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இன்று நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாமில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிகாலையிலிஇருந்த திரண்டு இருந்தனர்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 தடுப்பூசி முடிந்ததால் காலை ஆறு மணியிலிருந்து வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்த முடியாத பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இளைஞர் ஒருவர் போலீசாரிடம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் அந்தப் பகுதிக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலிடம் . பொதுமக்கள் காலையிலிருந்து வரிசையில் நின்றிருந்தும் தடுப்பூசி செலுத்த முடியவில்லை என கூறினா்.

அவர்களை சமாதானப்படுத்திய எஸ்பி. அரசு வழிகாட்டுதல்படி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். மாவட்டத்துக்கு கிடைக்கப்பெறும் தடுப்பூசிகள் தொடர்ந்து தாமதம் இல்லாமல் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது என பொதுமக்களை சமதானப்படுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 12 Jun 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!