/* */

வங்கி ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - விஜய் வசந்த் எம்.பி

வங்கி ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வலியுறுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

வங்கி ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - விஜய் வசந்த் எம்.பி
X

கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டு உள்ள அறிவிக்கையில்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தனியார் வங்கிகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் பாஜக ஆட்சியில் தொடர்ந்து மக்கள் விரோத போக்கும் தொழிலாளர்களின் உரிமையை நசுக்கும் செயலும், சர்வாதிகார மனநிலையும் எதிர்கால இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளன. குறிப்பாக பாஜக அரசு ஆட்சி செய்த கடந்த ஏழு ஆண்டு காலத்தில் மட்டும் அரசு வங்கிகள் ஈட்டிய மொத்த லாபம் ரூ.11,10,913 கோடியாகும்.

இதில் வாராக்கடன்களுக்காக லாபத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதி 12,38,346 கோடி ரூபாய், இந்த 12,38,346 கோடி ரூபாய் பணம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் 8,10,262 கோடி இந்த ஏழாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இதில் 90 சதவீதம் அளவிற்கு கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய வராக்கடன்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க வங்கிகள் எவ்வாறு லாபத்தில் செயல்பட முடியும், வாரா கடன்களை பெற கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என வங்கி ஊழியர் சங்கத்தினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டுவருவது கடும் கண்டனத்துக்கரியது. இந்த வாராக்கடன் சுமை காரணமாக கடன் வட்டி அதிகரிப்பு, சேவை வரி அதிகரிப்பு போன்ற அழுத்தம் அனைத்தும் வாடிக்கையாளர்கள் மீதே திணிக்கப்படுகிறது என்பது வேதனை அளிக்கும் செயல்.

தற்போது மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கிகளில் 51 சதவீத பங்குகள் அரசிடம் உள்ளது, இதனை தற்போது 33 சதவீதமாகவோ, 26 சதவீதமாகவோ குறைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பாரத் ஸ்டேட் வங்கி தவிர ஏனைய 11 பொதுத்துறை வங்கிகளையும் எதிர்காலத்தில் அரசு எளிதாக தனியார்மயமாக்க சாதகமான நிலை ஏற்பட்டுவிடும். ஒருவேளை அரசு நினைத்தது போன்று அரசு வங்கிகள் தனியார் மயம் ஆக்கப்பட்டால் 34 கோடி ஜன் தன் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவை மறுக்கப்படும்.

மக்கள் வங்கிகளின் மீதான நம்பக தன்மையை இழக்க நேரிடும், மேலும் விவசாயம், சிறு குறு தொழில் நலிவடைந்து போகும், கல்விக்கடன் பெற முடியாமல் மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் போகும். இந்த சங்கிலி தொடரால் நாட்டில் வேலையின்மை, பசி, பஞ்சம், நுகர்வுதிறன் குறைவு போன்ற நிலை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும், இவ்வாறு விஜய் வசந்த் கூறி உள்ளார்.

Updated On: 17 Dec 2021 2:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  5. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  6. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  8. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  10. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்