/* */

கடந்த மூன்று ஆண்டுகளில் எம்.பி செல்வம் செய்த பணிகள் என்ன?

கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

HIGHLIGHTS

கடந்த மூன்று ஆண்டுகளில் எம்.பி செல்வம் செய்த பணிகள் என்ன?
X

கடந்த ஐந்தாண்டுகளாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக செயல்பட்ட க.செல்வம்.

கடந்த 2019 முதல் 2014 வரை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த க.செல்வம் என்பவர் செயல்பட்டு வந்தார். இக்காலத்தில் கொரோனா பெரும் தொற்று நோய் பரவல் காரணமாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி இல்லை என அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு மூன்றாண்டுகளுக்கு சுமார் 2 கோடியே 67 லட்சத்து 99 ஆயிரத்து 655 ரூபாய் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

வயிற்று வலி? அலட்சியம் வேண்டாம்! கணைய அழற்சியின் அபாயமாக இருக்கலாம்!

இந்தப் பணிகள் குறித்து தெரிவிக்கையில் , காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு கிராமம் என தேர்வு செய்யப்பட்டு, அண்ணா மறுமலர்ச்சி திட்டம் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டம், கிராம யோஜனா திட்டம் , தூய்மை இந்தியா திட்டம் , பொது நிதி எம்பி எம்எல்ஏ ஆகிய நிதிகளைக் கொண்டு முத்துவேடு , அருங்குன்றம் , கடுக்களூர் திம்மாபுரம் ஆகிய கிராமங்களை தத்கிராமங்க செயல்படுத்தி உள்ளார்.

*2019 - 20 முத்துவேடு கிராமத்தில்* கால்நடை வளர்ப்பு கூடம் , இரண்டு ஆற்றுக்கால்வாய்கள், 200 மரக்கன்றுகள் சிமெண்ட் சாலை , இ பேட்டரி வாகனம் ஆழ்துளை கிணறு , ஐந்து சுகாதார கழிவறைகள், நூலகம் கட்டிடம் புனரமைத்தல் , கால்நடை வளர்ப்பு கூடம் என சுமார் 54 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

*20121-2022ல் செங்கல்பட்டு மாவட்டம் அருங்குன்றம் கிராமத்தில்* , குழாய் வழித்தடங்கள் பேவர் பிளாக் சாலை , மண்புழு உரக்குழி திட்டம், அங்கன்வாடி கழிவறைகள் , நீர் தேக்க தொட்டியுடன் கூடிய புதிய ஆழ்துளை கிணறு , ஏரிவரத்து கால்வாய் , பள்ளி செல்லும் சாலை, 550 மரக்கன்றுகள் , கால்நடை வளர்ப்பு கூடம் , காரியமேடை நீர் வரத்து வடிகால் , திறந்த வெளி விழா மேடை , தெரு விளக்குகள் என சுமார் 83 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பப்பாளி போதும்... முகம் சும்மா பளப்பள பளப்பளனு!

2022 - 2023 கடுக்களூர் கிராமத்தில், சிமெண்ட் சாலை குழாய் , புதிய வழித்தடம் வாகனம் , குடிநீர் நீர்த்தேக்க தொட்டி , ஊராட்சி பள்ளியில் பெண்களுக்கான கழிவறை , கதிரடிக்கும் களம் , நூலகம் மற்றும் கழிவறை புனரமைப்பு , காளான் வளர்ப்பு கூடம் , நீர் வரத்து கால்வாய் , முருங்கை தோட்டம் உள்ளிட்ட சுமார் 78 லட்சத்து 84,000 மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

*2023 -2024 திம்மாபுரம் கிராமத்தில்* , பள்ளி சமையல் கூடம் குழாய் வழித்தடம் சிமெண்ட் கான்கிரீட் சாலை , குறுக்கு வடிகால், நாடக மேடை , பேவர் பிளாக் சாலை , சிமெண்டு சாலை என சுமார் 53 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதே போல் பயணயர் நிழற்குடை, உயர் மின் கோபுர விளக்கு என பல பணிகள் நிறைவு பெற்றது

Updated On: 22 March 2024 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்