/* */

சூடு பிடித்தது காஞ்சிபுரம் தேர்தல், சுவர் விளம்பரம் விறு, விறு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கிராமங்களில் விறு, விறுப்பாக சுவர் விளம்பரம் வரையப்படுகிறது.

HIGHLIGHTS

சூடு பிடித்தது காஞ்சிபுரம் தேர்தல், சுவர் விளம்பரம் விறு, விறு
X

சுவர் விளம்பரங்களுக்கு இடம் பிடிப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் கட்டமாக காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற உள்ளது.

தற்போது அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தந்த கட்சியை சார்ந்த கிராம செயலாளர்கள், உறுப்பினர்கள் பலரும் தாங்கள் போட்டியிடுவதாக கூறி வேட்புமனுவை கட்சி மாவட்ட செயலாளரிடம் வழங்கி வருகின்றனர்.

மற்றொருபுறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சென்று வேட்புமனுவை பெற்று வருகின்றனர். இது அல்லாது பலரும் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.

இதற்கு அடுத்தப்படியாக கிராமங்களில் உள்ள சுவர்களை பிடித்து வேட்பாளர்கள் பெயர்கள் , கட்சி சின்னம் வரையத் தொடங்கி உள்ளனர்.

கிராம ஊராட்சி வேட்பாளருக்கான சின்னம் மட்டும் விடுபட்டுள்ளது. இதேபோல் ஒன்றிய குழு உறுப்பினர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பெயர்களும் மட்டுமே எழுத வேண்டியது பாக்கி உள்ளது.

இது மட்டும் இல்லாது தங்களது உறவினர்களை அழைத்து பேசுவதும் அப்பகுதியாக வரும் பொதுமக்களிடம் தனக்கு ஆதரவு தரும்படி கேட்டு வருகின்றனர்மாவட்டத்தில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ளது.

Updated On: 17 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்