/* */

காஞ்சிபுரத்தில் புதியதாக கட்டப்படும் வேணு கோபால சுவாமி திருக்கோயில்!

காஞ்சிபுரம் ஒக்கப்பிறந்தான் குளம் புதுத்தெருவில் பல லட்சம் மதிப்பில் வேணுகோபால சுவாமி பஜனைக் கோயில் கட்டப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் புதியதாக கட்டப்படும் வேணு கோபால சுவாமி திருக்கோயில்!
X

ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு புதியதாக கட்டப்பட்டு வரும் பஜனை திருக்கோயில்.

காஞ்சிபுரம் ஒக்கப்பிறந்தான் குளம் புதுத்தெருவில் பல லட்சம் மதிப்பில் வேணுகோபால சுவாமி பஜனைக் கோயில் கட்டப்பட்டு வருகிறது.

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு வைணவ திவ்ய தேசங்களும், சைவ திருக்கோயில்களும், நூற்றாண்டு கடந்த சர்ச்சுகளும், மசூதிகளும் உள்ளது.

அவ்வகையில் பெரியகாஞ்சிபுரம் பகுதியில் ஒக்கப்பிறந்தான் தெருவில் பழையான பஜனைக் கோயிலாக இருந்த வேணுகோபால சுவாமி திருக்கோயிலினை புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டு இதற்கான கட்டிட வடிவமைப்பு மற்றும் சிலைகள் வடிவமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று அதற்கான நிர்வாக குழு அமைக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது.

பழமை மாறாமல் முழுவதுமாக புதியதாக பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.கோயில் வளாகத்திற்குள் விநாயகர், முருகன் சந்நிதிகளும் தனித்தனியாக கட்டப்பட்டு வருகிறது.


இது குறித்து கோயில் கும்பாபிஷேக திருப்பணிக் குழுவின் தலைவர் கே.ராஜேந்திரன் கூறியது.

சுமார் 103 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான வேணுகோபால சுவாமி பஜனைக் கோயில் தற்போது முழுவதுமாக புதுப்பித்துள்ளோம். கோயில் மூலவராக 6 அடி உயரத்தில் கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதும் அழகிய விக்கிரகமும், விநாயகர், முருகன் சிலைகள் தலா இரண்டேகால் அடி உயரத்திலும் கற்சிலைகள் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகா சம்ப்ரோஷணம் நடத்தும் வகையில் நாள் குறித்து அதற்காக திருப்பணிகளை தீவிரப்படுத்தி செய்து வருகிறோம் என்றார்.

பேட்டியின் போது கும்பாபிஷேக திருப்பணிக் குழுவின் துணைத் தலைவர்கள் எஸ்.தீனதயாளன், ஆர்.ராமு,செயலாளர் டி.தயாளன் மற்றும் ஸ்தபதி ஆர்.நந்தகுமார் ஆகியோர் உட்பட பலரும் உடன் இருந்தனர்.

Updated On: 29 Oct 2023 12:44 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்