/* */

காஞ்சிபுரத்தில் இணையதள புகாருக்கு ஓரே நாளில் தீர்வு கண்ட மாவட்ட நிர்வாகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இணையதளம் மூலமாக குறைகளை விரைவாக தீர்வு காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் இணையதள புகாருக்கு ஓரே நாளில் தீர்வு கண்ட மாவட்ட நிர்வாகம்
X

புகார் அளித்து தீர்வு கண்ட மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த பதிவு.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட தீர்வுகள், குடிமைப்பொருள் பெறுவதற்கான அட்டை உள்ளிட்ட அனைத்துத் துறை குறைகளையும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாரம்தோறும் வழங்குவது வழக்கம்.

அவ்வாறு வழங்கப்பட்ட மனுக்கள் துறை ரீதியாக அனுப்பப்பட்டு தீர்வு காண குறைந்தது இரு மாத கால அவகாசம் இருக்கும். மேலும் பல மனுக்கள் பல மாதங்கள் காலதாமதத்தை சந்திக்க நேரிடும்.

தற்போது புதிதாக பதவியேற்ற திமுக அரசு பொது மக்கள் குறைகளை உடனடியாக தீர்க்க அறிவுறுத்தியது. அரசு தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் விரைந்து தீர்வு காண முனைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி படித்து இனையதள பயன்பாட்டாளர், தபால் வழி குறைகளை தெரிவித்தல், நேரடியாக குறைதீர் நாட்களில் மனு அளிப்பவர் என மூன்று வகையாகப் பிரித்து தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் இணையதள வழியாக புகார் தெரிவிக்கும் பொதுமக்களின் புகாரின் நம்பகத்தன்மையை அறிந்து அதற்கேற்ப தீர்வு காணவும் அறிவுரை வழங்கினார்.

தற்போதைய காலத்தில் இணையவழி பயன்பாட்டாளர்கள் அதிகம் உள்ளதாலும் , கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவைகளில் புகார் அளிக்க அதன் முகவரிகளை காஞ்சி மாவட்ட நிர்வாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற இரண்டு மாத காலத்தில் இணையதள வழி புகார்கள் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. உதாரணமாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்து இரு மாதங்கள் ஆகிறது தற்போது வரை கிடைக்கவில்லை என தெரிவித்தும், எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை என நேற்று மதியம் இனையதளம் வாயிலாக புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதன் நம்பகத்தன்மையை அறிந்து உடனடியாக அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் இன்று மதியம் வழங்கபட்டது. இதனை பெற்றுக் கொண்டு ஒரே நாளில் தீர்வு அளித்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து அதே இணையதளத்தில் தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிகம் தெரிந்துகொள்ளும் வகையில் பொதுமக்கள் புகார்களை இணையதளம் வழியாக தெரிவிக்க அனைத்து வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்து வருகிறார்.

தற்போது வரை இணையதளத்தில் புகார் அளித்த அனைத்து புகார்களும் மாவட்ட நிர்வாகம் தீர்வு கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...