/* */

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பேருந்து நிலையம். இந்தப் பேருந்து நிலையத்தில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு அதற்கான தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையின் முன்பு பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகவும், பல கடைகள் நிரந்தரமாக கடை அளவில் தாண்டி சாலையில் வியாபாரம் செய்து வருவதால் உடனடியாக அனைத்தையும் அகற்ற ஒரு வாரம் முன்பு அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனைக் கண்டுகொள்ளாத வியாபாரிகளை கண்ட மாநகராட்சி ஆணையர் கண்ணன், பேருந்து நிலையத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்யப் பட்டவர்களின் பொருட்களை பறிமுதல் செய்யவும், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி சீர் செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்று நகர அமைப்பு ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் சிவகாஞ்சி காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை காலை முதல் அகற்றி வருகின்றனர்.

அவ்வப்போது மாநகராட்சி ஊழியர்களுக்கும் வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. இதனை காவல்துறை தடுத்து பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள உதவி வருகின்றனர்.

Updated On: 13 July 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  2. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  3. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  4. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  5. கலசப்பாக்கம்
    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  6. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  7. வந்தவாசி
    வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
  8. வீடியோ
    என் வெற்றிக்கு யார் காரணம் ! விழுப்புரம் மாணவி அசத்தல் பதில் !...
  9. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு