வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!

வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்து..!
X

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

வந்தவாசி அருகே நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையோரம் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிய லாரி காலை காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வந்தவாசி குளத்துமேடு பகுதியைச் சோ்ந்த ஜாகிா்உசேன் லாரியை ஓட்டினாா்.

வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில், வடநாங்கூா் கூட்டுச் சாலை அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் நெல் மூட்டைகள் சிதறி சேதமடைந்தன. லாரி ஓட்டுநா் ஜாகிா் உசேன் காயமின்றி தப்பினாா். விபத்து குறித்து வந்தவாசி வடக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசி அருகே பைக் மீது மினிசரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்

வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்த்திபன் மகன் அா்ச்சுனன் . இவா் சென்னை மறைமலை நகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் இரவு தனது விவசாய நிலத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி-உத்திரமேரூா் சாலையில், இரும்பேடு கூட்டுச்சாலை அருகே சென்ற மினி சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அா்ச்சுனனை அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உத்தரமேரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அா்ச்சுனன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அா்ச்சுனனின் தாய் மலா் அளித்த புகாரின் பேரில், கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!