அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
X

தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ

கலசப்பாக்கத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள மேல் சோழன் குப்பம் ஊராட்சியில் மக்களின் தாகத்தை தணிப்பதற்கு தண்ணீர் பந்தலை முன்னால் அமைச்சரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி கண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ பேசியதாவது,

மக்களின் தாகத்தை போக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என்று அதிமுக பொது செயலாளர் , முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார்.

அதன்படி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கலசப்பாக்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளது.

அதுவும் இப்பொழுது கத்திரி வெயில் தொடங்கியுள்ளதால் 108 டிகிரியை தாண்டியுள்ளது. அதனால் மக்கள் வெளியே வருவதற்கு மிகவும் அச்சப்பட்டு உள்ளனர் .அவசியம் இருக்கும் பட்சத்தில் மக்கள் வெளியே வருகின்றனர். அவர்களுக்கு தாகம் கணிப்பதற்கும் வெப்பத்தை போக்கி சுத்தமான குடிநீர் வழங்குவதற்கும் இப்போது தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது

இந்த தண்ணீர் பந்தல் மூலம் மக்களுக்கு குடிநீர், மோர், தர்பூசணி, முலாம்பழம், இளநீர், பப்பாளிப்பழம், வெள்ளரிக்காய் ,கரும்பு ஜூஸ், பழ ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவை மக்களுக்கு வழங்கி மக்களை வெப்பத்திலிருந்து மீட்டு அவர்களுக்கு நீராகாரப் பொருட்களை வழங்கி வருகிறோம்,

மேலும் மக்கள் வெப்ப நிலையில் பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டும். உடல் குறைபாடு கொண்ட மக்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டும். மக்கள் வெப்ப நேரத்தில் நீர் ஆகார பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதா ,மாவட்ட பொருளாளர் நைனா கண்ணு, மாவட்ட கலை பிரிவு செயலாளர் துறை, அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு தலைவர்கள், அதிமுக ஒன்றிய கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,கிளைக் கழக நிர்வாகிகள் ,அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!