/* */

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக தலைமையில் போராட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சி மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்ற போது அதிமுக- திமுக இடையே கடும் வாக்குவாதம் கோஷங்கள் என பரபரப்பாக காணப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக தலைமையில் போராட்டம்
X

காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தங்கள் பகுதிகளில் திட்டங்கள் செயல்படுத்துவதில்லை எனக்கூறி அதிமுக மற்றும் கூட்டணி மாமன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு துணியை கண்ணில் கட்டியவாறு வருகை புரிந்து மேயர் இருக்கை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டத்தை புறக்கணிப்பதாக எதிர் கட்சி கவுன்சிலர்கள் கூறிய போது கிளம்புங்க என்று மேயர் ஒருமையில் கூறியதால் கவுன்சிலர்கள் கோபப்பட்டு கூச்சலிட்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் கூட்டரங்கில் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் உள்ள கவுன்சிலர்கள் மாதந்தோறும் மாதாந்திர கூட்டம் நடைபெற்று மாநகராட்சிக்கு தேவையான முக்கிய அடிப்படை வசதிகளை தீர்மானமாக நிறைவேற்றி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 35 உறுப்பினர்கள் திமுகவினரும் மீதமுள்ள 16 நபர்கள் அதிமுக, பாஜக, பாமக, தாமக உள்ளிட எதிர்க்கட்சியாகவும் உள்ளனர்.

மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சி 16 உறுப்பினர்கள் அவர்களின் வார்டுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை, கருப்பு சேலையில் வந்து கண்களில் கருப்பு துணியை கட்டியவாறு கூட்டத்திற்கு வருகை புரிந்தனர்.

மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் 10.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 10.45 வரை மாமன்ற கூட்டம் தொடங்காததால் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மேயர் இருக்கை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் இதனை கண்டித்து திமுகவை சேர்ந்த திமுக உறுப்பினர்களும் எதிர்கோஷம் போட்டதால் இருவரிடமே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேயர் மகாலட்சுமி யுவராஜ் சபைக்கு வந்ததும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் புறக்கணிப்பதாக தெரிவித்த போது சற்று என்று மேயர் கிளம்புகள் என உரிமைகள் பேசினால் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரமாக மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாமன்ற கூட்டத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டதால அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 28 July 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  6. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  7. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  9. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?