/* */

காஞ்சிபுரத்தில் மின் தடைக்கு காரணமான அணில்களை பிடிக்க வலியுறுத்தி, பா.ஜ.க கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரத்தில் ஏற்படும் மின் தடைக்கு காரணமான அணில்களை பிடிக்க வேண்டும் எ்னறு கேட்டு பா.ஜ.கவினர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் மின் தடைக்கு காரணமான அணில்களை பிடிக்க வலியுறுத்தி, பா.ஜ.க கலெக்டரிடம் மனு
X

காஞ்சிபுரத்தில் மின் தடைக்கு காரணமான அணில்களை பிடிக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பா.ஜ.கவினர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது . இந்நிலையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் மின்தடைக்கு அணில் ஒரு காரணமாக விளங்குகிறது என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காஞ்சிபுரம் நகர பாஜக தலைவர் அதிசயம் குமார் தலைமையில் பாஜகவினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனு ஒன்றை செலுத்தினர்.

இம்மனுவில் , தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதற்கு காரணம் அணில்கள் தான் என்று தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார் .

இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படும் மின்வெட்டுக்கு காரணம் அணில்களாதான் தான் இருக்ககூடும் என்று தோன்றுகிறது.

ஆகையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றித்திரியும் அணில்களை பிடித்து வனத்துறையினர் ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது .

Updated On: 23 Jun 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  3. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  9. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?