/* */

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது..

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது..
X

இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள். 

தொழிற்சாலைகள் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய தொழிற்சாலை பகுதிகளாக ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகள் உள்ளன. மேலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகளும் தற்போது உருவாகி வருகிறது.

பல ஆயிரம் தொழிற்சாலைகள் நிறைந்த இந்தப் பகுதியில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிற்சாலை பணிக்கு செல்ல ஊழியர்கள் இருசக்கர வாகனத்தினை பயன்படுத்துகின்றனர். மேலும், பல ஊர்களில் இருந்து வரும் ஊழியர்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்வது வழக்கம்.

அப்படி செல்லும்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட இதுபோன்ற திருட்டு புகார்கள் உள்ளன.

இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் உத்தரவின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் ஆலோசனையின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் ஆய்வாளர் தலைமையில் பல்வேறு இடங்களில் திடீர் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர்- திருவள்ளூர் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரண்டு பைக்கில் வந்த நான்கு பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஓட்டி வந்த இரண்டு பைக்கும் திருட்டு பைக் என தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்த போலீஸார், 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர், ஜெயச்சந்திரன், வீரமணி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பதும் தெரியவந்தது.

மேலும், அவர்கள் நான்கு பேரும் ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 18 Nov 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்