/* */

மத்திய அமைச்சரிடம் பாலாறு அருகே வசிக்கும் பொது மக்கள் குடிநீர் வசதி கோரி மனு

மாநகராட்சி சார்பில் பாலாறு குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்திய ஜல் சக்தி அமைச்சரிடம் மனு அளித்தனர்

HIGHLIGHTS

மத்திய அமைச்சரிடம் பாலாறு அருகே வசிக்கும் பொது மக்கள் குடிநீர் வசதி கோரி மனு
X
காஞ்சிபுரம் வந்த மத்திய நீர்வளத்துறை  அமைச்சர் கஜேந்திரசிங் செகவாத்திடம் மனு அளித்த குடியிருப்போர் நல சங்க நிர்வாகி. உடன் மாமன்ற உறுப்பினர் கயல்விழிசூசை.

உயிர்நீர் இயக்க (ஜல்ஜீவன் மிஷன்) திட்டபணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மத்திய நீர்வளத்துறை (ஜல்சக்தி) அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஒரு நாள் அரசு பயணமாக இன்று காலை சென்னை வந்தார்.

தமிழக அமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 46வது வார்டு பகுதியில் குபேரன் நகரில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர் கயல்விழிசூசை ஆகியோர் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .

அந்த மனுவில், தனது தங்களது நகருக்கு அருகிலேயே பாலாறு நீர்வழித்தடம் செல்லும் நிலையில் தங்களுக்கு பாலாற்று குடிநீர் வழங்கவில்லை. எனவே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வேண்டுகோளாக வைத்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர், மாநகராட்சிக்கு பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கலந்து கொண்டார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் உயிர்நீர் இயக்க திட்டப்பணிகள், தூய்மைபாரத திட்டத்தின் பணிகள் மற்றும் குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இத்திட்டங்கள் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் முடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 124.94 இலட்சம் வீடுகளில் 69.50 இலட்சம் (55.63%) வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் இத்திட்டத்தை சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தி ஒன்றிய அரசிடம் விருது பெற்றுள்ளது. அதேபோல் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறைகள் அமைக்கும் பணியினை இம்மாவட்டம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும், கடந்த ஓராண்டு காலமாக தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி, இந்திய அரசின் ஜல்சக்தி துறை இயக்குநர் விஸ்வ கண்ணன்., தமிழக ஜல்சக்தி துறை கூடுதல் இயக்குநர் ஆனந்த ராஜ், தனிச்செயலர் உதய சௌத்ரி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Oct 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!