/* */

கோயில் நகரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், போஸ்டரால் பரபரப்பு

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் புதிய அரசு மதுபான கடை அமைப்பதை எதிர்த்து, நகர் முழுவதும் ஒட்டப்பட்ட கண்டன போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோயில் நகரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், போஸ்டரால் பரபரப்பு
X

கோயில் நகரமான காஞ்சியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயில் நகரம், பட்டு நகரம் என பல புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரத்துக்கு வருகை தருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே புதிய அரசு மதுபானக்கடை திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கு பொதுமக்கள் தொழிலாளர்கள் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் நிமிர்ந்து ஒருமித்த குரலாக எதிர்ப்புகள் எழுந்து உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் நகரம் முழுவதும் கோயில் நகரத்தில் டாஸ்மார்க்கா என கேள்வி எழுப்பி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் பேருந்து நிலையத்தில் எதிரே புதிய டாஸ்மாக்கா ?, கொடுப்பது ஒரு முகவரி.. திறப்பது ஒரு முகவரியா..? விவசாயிகளின் விளை பொருட்கள் விற்கும் இடத்தில் அரசு மதுபான கடையா ? பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அரசு மதுபான கடையா? அதிக அளவில் சுமைதக்கும் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் டாஸ்மாக்கா ? வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம் , காவல் நிலையம் என அரசு சார்ந்த பகுதிகளில் டாஸ்மாக்கா ? என்பது போன்ற கேள்விகள் இதில் எழுப்பப்பட்டுள்ளது.

இது போன்ற கேள்விகள் பொது மக்கள் அன்றாடம் கேட்கும் கேள்வி என்பதால் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு, இது நடக்குமா, அரசு வருமானத்தை மட்டுமே பார்க்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Updated On: 3 Aug 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  2. சோழவந்தான்
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: மதிமுக துரை வைகோ நம்பிக்கை...!
  3. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட நில முகவர்கள், தரகர்கள் நலச் சங்கத்தினர் எம்எல்ஏவிடம்...
  6. கும்மிடிப்பூண்டி
    திரிபுரசுந்தரி, திருவாலீஸ்வரர் திருக்கோயில் நூதன ஸ்த்துபி பிரிதிஷ்டை...
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் ஒத்திகை பயிற்சி
  8. கோவை மாநகர்
    யானைக்கூட்டத்துடன் தாயை பார்க்க வந்த குட்டி யானை
  9. தொழில்நுட்பம்
    அரிய வான அணிவகுப்பில் ஆறு கிரகங்கள்: நாளை காணலாம்
  10. கோவை மாநகர்
    இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்