நாமக்கல்லில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் ஒத்திகை பயிற்சி

நாமக்கல்லில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் ஒத்திகை பயிற்சி
X

நாமக்கல் அருகே, தேசிய பேரிடர் மீட்புத்துறை சார்பில் நடைபெற்ற, பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சியை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டார். அருகில் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், டிஆர்ஓ சுமன் ஆகியோர்.

நாமக்கல்லில் தேசிய பேரிடம் மீட்புப்படை சார்பில், பேரிடர் மீட்புப்பணி குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல்லில் தேசிய பேரிடம் மீட்புப்படை சார்பில், பேரிடர் மீட்புப்பணி குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல் அடுத்துள்ள எர்ணாபுரம் தனியார் கல்லூரியில், தேசிய பேரிடர் மீட்புப்படையின் சார்பில், மீட்புப்பணி மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாவட்ட எஸ்.பி.ராஜேஷ்கண்ணன், டிஆர்ஓ சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4-வது பட்டாலியன் உதவி தலைவர் ஸ்ரீதர் தலைமையில் டீம் கமாண்டர், பாதுகாப்பு அலுவலர், மதிப்பீடு அணியினர், தேடுதல் மற்றும் வெட்டுதல் அணியினர், மருத்துவ அணியினர், தகவல் தொடர்பு அலுவலர்கள், கயிறு மூலம் மீட்புப் பணி அணியினர் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட மீட்புப் பணி மாதிரி ஒத்திகை பயிற்சியை நடத்தினார்கள்.

ஒத்திகை பயிற்சியின்போது, கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் பாதிக்கப்பட்ட நபரை கேமரா மூலம் கண்டறிவது, சுவற்றில் சுழலும் மீட்பு கருவிகள், துளையிட்டு மீட்கும் பணிகள், உயரமான கட்டிடத்தில் சிக்கிய நபரை கயிறு மற்றும் ஸ்ட்ரெச்சர் மூலம் மீட்கும் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகளை நேரடியாக செய்து காண்பித்தனர்.

மேலும் மீட்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி அளிப்பது, தொடர் சிகிச்சைக்கு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் குறித்தும் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட தீயணைப்பு துறையினர் மூலம் தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு துறையினர் பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளுக்கு உபயோகப்படுத்தும் நவீன உபகரணங்கள் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர். பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!