சோழவந்தான் பகுதியில், சேறும் பகுதியுமாக காட்சியளிக்கும், குடியிருப்பு பகுதி!
சோழவந்தானில் சேரும் சகதியமாக காட்சியளிக்கும் குடியிருப்பு பகுதிகள்:
சோழவந்தான்:
10 ஆண்டுகளாக வீட்டு வரி செலுத்தியும் எந்த அடிப்படை வசதியும் செய்து தராததால், போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் ஆவேசம். மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு விரிவாக்கப் பகுதியான பத்மா கார்டன் பகுதியில், சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில், சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வரும் பொது மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராததால், தற்போது பெய்த மழைக்கு குடியிருப்பு பகுதியின் தெருக்களில் சேரும் சகதியும் தேங்கி பொதுமக்கள் நடக்கவே முடியாத நிலையில் இருப்பதாகவும், மழை நீர் தேங்குவதால் பாம்பு பல்லி போன்ற விஷப் பூச்சிகள் வீட்டிற்குள் சர்வ சாதாரணமாக வந்து செல்வதாகவும் , வயதானவர்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத அவல நிலை உள்ளதாகவும், இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நேரில் புகார் அளித்தும், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் புகார் தெரிவித்தும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை வசதியோ தெரு விளக்கு வசதியோ குடியிருப்பு பகுதியில் சாலை வசதியோ எந்த ஒரு வசதியும் செய்து தரவில்லை எனவும், 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் முறையாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு மாதம் தவறாமல் வரி செலுத்தி வருவதாகவும், இனிமேலும் எங்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றால் வரி கட்டுவதை நிறுத்தப் போவதாகவும் ஆவேசத்துடன் தெரிவிக்கின்றனர் .
மேலும் , மக்கள் பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பது எங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தான் இந்த வேலையை கூட செய்யவில்லை என்றால், அவர்கள் எதற்கு பதவியில் இருக்கிறார்கள் இனிமேல், எங்கள் பகுதிகளுக்கு யாரும் வாக்கு கேட்டு வரக்கூடாது எனவும், விரைவில் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை சரி செய்து தரவில்லை என்றால் குடியிருப்பு வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu