திரிபுரசுந்தரி, திருவாலீஸ்வரர் திருக்கோயில் நூதன ஸ்த்துபி பிரிதிஷ்டை விழா..!

திரிபுரசுந்தரி, திருவாலீஸ்வரர் திருக்கோயில் நூதன ஸ்த்துபி பிரிதிஷ்டை விழா..!
பெரியபாளையம் அருகே நெய்வேலி கிராமத்தில் திரிபுரசுந்தரி, திருவாலீஸ்வரர் திருக்கோயில் நூதன ஸ்த்துபி பிரிதிஷ்டை விழா நடைபெற்றது.

நெய்வேலி கிராமத்தில் ஸ்ரீ திரிபுரசுந்தரி, திருவாலீஸ்வரர் திருக்கோயில் நூதன ஸ்த்துபி பிரிதிஷ்டை விழா நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே நெய்வேலி கிராமத்தில் சுமார் 250 ஆண்டுகால பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆலயமான அருள்மிகு ஸ்ரீ திருப்புரசுந்தரி சமேத திருவாலீஸ்வரர் ஆலயத்தில் நூதன ஸ்த்துபி பிரதிஷ்டை விழா ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் கணபதி பூஜை,லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை மற்றும் கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, யாகசாலை பூஜை போன்ற பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


பின்னர் யாகசாலையில் பூஜை செய்த கலசங்களை மேளதாளத்துடன் ஆலய மாடவீதி உலாவந்து ஆலய நுழைவாயில் கோபுரத்தில் உள்ள சுவாமி மற்றும் விமான கலசங்களுக்கு (ஸ்த்துபி பிரதிஷ்டை என்னும்) புனிதநீரால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பித்து பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள மூலவருக்கு பால், தயிர், சந்தனம்,ஜவ்வாது, தேன், திருநீர், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


இவ்விழாவை முன்னிட்டு ஆலயம் சார்பில் பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதான பிரசாதங்கள் வழங்கினர். இத்திருவிழாவிற்கு ஆலய பொறுப்பாளர்கள், சுற்றுவட்டார பக்தர்கள், கிராமபொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story