/* */

காஞ்சிபுரம் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ஊட்டச்சத்து முகாம்

6 வயத்திற்குபட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் உடல் நலம் பரிசோதனை முகாம் நாள்தோறும் ஒவ்வொரு கிராமத்திலும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ஊட்டச்சத்து முகாம்
X

ஊட்டச்சத்து சிறப்பு முகாமில் கலந்து கொண்ட ஒன்றிய குழுத்தலைவர் மலர்கொடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் கணக்கெடுத்து அவர்களின் ஊட்டச்சத்து நிலையை கண்டறியும் முகாம் மாவட்டத்திலுள்ள பல மையங்களில் நடைபெறுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்ற வருகிறது. மாகரல் கிராம ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் துவக்கி வைத்து குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றை கணக்கில் செய்வதை ஆய்வு செய்தார். இம்முகாமில் குழந்தைகளின் சராசரி உயரத்திற்கு ஏற்ப அவர்களின் எடை இருப்பதை உறுதி செய்தல், இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனை, ஊட்டச்சத்து வழங்கி ஆரோக்கியமான குழந்தையை வளர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதில் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் சத்துமாவு, கடலைமிட்டாய் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை குழந்தைகளின் பெற்றோரிடம் வழங்கினார். பின்னர், அப்பகுதியில் செயல்பட்ட வரும் அங்கன்வாடிக்கு சென்று குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் ருசிபார்த்து ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், கவுன்சிலர் பரசுராமன் , ஊராட்சி மன்ற தலைவர் மேத்தா ஞானவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி மற்றும் மருத்துவர்கள், குழந்தைகளின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 May 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்