/* */

கல்குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது: பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் அடுத்த பேரணக்காவூரில் கல்குவாரிகளால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

கல்குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது: பொதுமக்கள் கோரிக்கை
X

கல் குவாரிகளால் விபத்துக்கள் அதிகளவு நடைபெறுவதாக கூறி பேரணக்காவூர் கிராம பொதுமக்கள் குவாரிக்கு தடை விதிக்க கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பேரணக்காவூரில் கல்குவாரிகளால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால் கல்குவாரிகள் அமைக்க தடை விதிக்க வேண்டும் என அக்கிராம மக்கள் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் பழையசீவரம் , மதூர் , மாகறல் உள்ளிட்ட பகுதிகளில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது இங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் அல்லது பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கும் கட்டுமான பொருள்களுக்கு தேவையான எம்சாண்ட் ஜல்லி உள்ளிட்டவைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

இதில் குறிப்பாக சென்னை புறநகருக்கு மிக ஒட்டிய பகுதிகளான மதுர் பேரணக்காவூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பேரணக்காவூர் கிராமத்தில் ஏற்கனவே ஒரு கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

இக்கல்குவாரியால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் போக்குவரத்து இடையூறு இருந்து வருகிறது.இந்த நிலையில் மேலும் ஒரு கல்குவாரி அமைக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

எனவே பேரணக்காவூரில் பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு மேலும் கல்குவாரி அமைக்க தடை விதிக்க வேண்டும். ஓருபோதும் அனுமதியளிக்க கூடாது எனவும் அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

கல் குவாரிகளிலிருந்து செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவு பாரம் ஏற்றி செல்வதால் மாநில சாலைகள் அனைத்தும் மிகவும் மோசமாக சேதம் அடைந்து போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதும், சாலைகள் சேதமடைந்து உள்ள நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி வாகனத்தின் மீது விழுவது மற்றும் கனலாக லாரிகள் வேகமாக செல்வதால் இதுபோன்ற விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுவதாக மாவட்டம் குற்றச்சாட்டு உள்ளது.

Updated On: 26 Jun 2023 1:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  2. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  4. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  6. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  7. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  8. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  10. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்