/* */

கல்வெட்டு குறிப்புகளை படித்து காட்டிய தொல்லியல் துறை அமைச்சர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்வெட்டு குறிப்புகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொண்டர்களுக்கு படித்து காட்டினார்.

HIGHLIGHTS

கல்வெட்டு குறிப்புகளை படித்து காட்டிய தொல்லியல் துறை அமைச்சர்
X

 தென்னேரி கிராமத்தில் அமைந்துள்ள தொல்லியல் துறை கோயில்களில் உள்ள கல்வெட்டுகளைப் படித்து தொண்டர்களுக்கு விலகிய அமைச்சர் தங்கம் தென்னரசு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆலோசனை மற்றும் பிரச்சாரத்திற்காக தமிழக தொழில் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று தென்னேரி சுற்றுப்பகுதிகளில் மாவட்ட செயலாளர் கே.சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் , வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் சேகர் ஆகியோருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தென்னேரியில் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.

அதன்பின் அக்கிராமத்தில் தொல்லியல் துறை கட்டுபாட்டில் ஆபத்சாகயேஸ்வரர் , காந்தலிங்கேஸ்வரர் என இரு சிவன் கோயில்கள் உள்ளதாக திமுக தொண்டர்கள் கூறியதும் அக்கோயிலை பார்வையிட்டார்.

அங்கு கோயிலில் உள்ள 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களை சரளமாக படித்து, திமுக தொண்டர்களுக்கு வரலாற்று குறிப்புகளை விளக்கினார்.

இதனைக் கண்ட தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியுற்று அமைச்சருக்கு கரகோஷம் எழுப்பினர்.

Updated On: 2 Oct 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!