/* */

காஞ்சி ராஜ குபேரர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் கோலாகலம்!

காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் ஸ்ரீ ராஜ குபேர சித்தர் பீடம் அமைக்கப்பட்டு தற்போது ராஜகோபுரம் மூலவர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சி ராஜ குபேரர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் கோலாகலம்!
X

காஞ்சி ஸ்ரீ ராஜ குபேர சித்தர் பீடத்தில் அமைக்கப்பட்ட ராஜகோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் ராஜகுபேர சித்தர் மற்றும் சிவாச்சாரியார்.

காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் குபேரப்பட்டிணத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராஜகுபேரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது..

சிவபெருமானிடமிருந்து செல்வத்தின் அதிபதியாக வரம் பெற்றவர் ஸ்ரீராஜ குபேரர். செல்வங்களை வாரி வழங்கக்கூடிய சக்தி வாய்ந்த இவருக்கு காஞ்சிபுரம் குபேரப்பட்டிணத்தில் புதியதாக கோயில் கட்டப்பட்டிருந்தது.

காஞ்சி ராஜ குபேர சித்தர் பீடத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தின் போது கலச புறப்பட்டு நடைபெற்ற போது

இக்கோயிலில் இன்று காலை 8.40 மணிக்கு ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகமும்,இதனையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி 3 யாககுண்டங்கள்,151 கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு சென்னை வடபழனி கோயில் அர்ச்சகர் சௌந்தர்ராஜன் தலைமையிலான 11 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர்.

காஞ்சி ஸ்ரீ ராஜ குபேர சித்தர் பீடத்தில் ராஜகோபுரம் மற்றும் மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற போது

யாசாலை பூஜைகள் சனிக்கிழமை மாலையில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று இறுதியாக பூர்ணாஹூதி நடைபெற்று கலச புறப்பாடு கோயில் திருக்கோயில் வளாகத்தை சுற்றி வந்து ராஜகோபுரம் அதனை தொடர்ந்து மூலவர் என தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் மோர், சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Updated On: 21 April 2024 3:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்