/* */

காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு

மாமன்ற கூட்டம் தொடர்பாக துணை மேயரிடம் ஆலோசிக்கவில்லை, சில மாமன்ற உறுப்பினர்கள் துணை மேயரை மாற்றுவோம் என கூறுவதாக குற்றச்சாட்டு கூறினார்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு
X

மாமன்ற கூட்டத்தில் துணை மேயர் குமரகுருநாதன் மேயர் முன்னிலையில் கடும் குற்றச்சாட்டுகளை கூறியபோது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் காலை 11 மணியளவில் மேயர் மகாலட்சுமி தலைமையில் துவங்கியது.

இந்த மாமன்ற கூட்டத்தில் முதல் முறையாக பெண்களுக்கு அதிக இடம் அளித்து பெண்ணுரிமையை பார்த்ததற்கு நன்றி தெரிவித்தல் , தீண்டாமையும் உறுதிமொழி, பிளாஸ்டிக் இல்லாத காஞ்சியை உருவாக்குதல் மற்றும் தமிழக அரசின் உத்தரவின்படி சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகள் தீர்மானங்களாக அறிவிக்கப்பட்டது.

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, திமுக உறுப்பினர்கள் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருந்தபோதே மாநகராட்சியின் துணை மேயரான காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் குமரகுருநாதன் மாமன்றத்திற்கு வந்து ஆணையாளரிடம், மாநகராட்சி முறையாக அரசு விதிகளை கடைபிடிக்கவில்லை எனக்கூறி மாமன்றத்தில் கடும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் துணை மேயர் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக கூறி அவையை விட்டு வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பின் செய்தியாளர்கள் பேசுகையில் , தமிழக முதல்வர் கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த மரியாதை அளித்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயரிடம் கூட்டம் குறித்து எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை. மாமன்ற உறுப்பினர்களில் சிலர் பகிரங்கமாக துணை மேயரை மாற்றுவோம் என கூறி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது என தெரிவித்தார்.

முதல் கூட்டத்திலேயே வாக்குவாதம் மற்றும் துணை மேயர் வெளிநடப்பு உள்ளிட்டவை காஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 11 April 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்