/* */

நடைபெறுவது ஸ்டாலின் ஆட்சியல்ல, சபரீசன் ஆட்சியே: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் தற்போது நடைபெறுவது ஸ்டாலின் ஆட்சியல்ல, சபரீசன் ஆட்சியே என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நடைபெறுவது ஸ்டாலின் ஆட்சியல்ல, சபரீசன் ஆட்சியே: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
X

காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்ப மனுக்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெற்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் எனது விருப்பமனு பெரும் நிகழ்வு இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தேர்தல் விருப்ப மனுக்களை பெற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருகை புரிந்தார். ஏராளமானோர் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து முன்னாள் அமைச்சரிடம் கொடுத்தனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் கெட்டுப் போய்விட்டது. அரசு அதிகாரிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இந்த அரசாங்கத்தால் தர இயலவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் விலைவாசி ஏற்றம் காணும் இதேபோல் விவசாய பெருமக்களின் இடு பொருட்களான யூரியா பொட்டாஷ் அனைத்தையும் தற்போது கடும் விலை ஏற்றத்தால் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் விளம்பரங்களைத் வைத்து மு க ஸ்டாலின் ஆட்சி செய்து வருவதாக கூறி வருகிறார்.

தற்போது தமிழகத்தில் சபரீசன் ஆட்சி மட்டுமே நடக்கிறது. நடைபெற்று வருவது திமுக ஆட்சி அல்ல, ஸ்டாலினுக்கு குடும்ப சண்டை பிரச்சினையில் தீர்வு காணவே அதிக நேரம் செலவிட படுவதும் உதயநிதி மற்றும் ஸ்டாலின் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே இந்த ஆட்சி போலி வாக்குறுதிகளை அளித்து வந்த ஆட்சி என தற்போது மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வி சோமசுந்தரம், கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், கே யு எஸ் சோமசுந்தரம், வள்ளிநாயகம், நகர செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அதிமுகவினர் உடனிருந்தனர்.

Updated On: 13 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  2. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  3. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  4. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  5. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  6. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  7. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  8. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  9. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  10. காஞ்சிபுரம்
    இருசக்கர வாகனத் திருட்டு: ஆட்டோ டிரைவர் கைது