/* */

நஷ்ட ஈடு தராததால் அரசு பேருந்து ஜப்தி

விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் ஜப்தி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நஷ்ட ஈடு தராததால் அரசு பேருந்து ஜப்தி
X

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் மற்றும் அவரது நண்பர் ஹேமசந்திரன். இருவரும் தாம்பரத்திலுருந்து திண்டிவனம் நோக்கி 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பேருந்து இவர்கள் மீது மோதியதில் இருவரும் இறந்தனர். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென இறந்த சந்தோஷ்க்குமாரின் தாயார் சகுந்தலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி கருணாநிதி 14 லட்சத்து 47ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கிட வேண்டுமென கடந்த 2017ஆண்டு தீர்பளித்தார். தற்போது அவற்றிற்கு வட்டியுடன் சேர்ந்து 20 லட்சத்து 75ஆயிரமாக அதிகரித்தது. பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் நேற்று முன்தினம் அப்பேருந்தினை ஜப்தி செய்திட மாவட்ட நீதிபதி, நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்திரவிட்டார். அதன் பெயரில் அரசு பேருந்தினை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள் தாலுகா அலுவலக பகுதியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Updated On: 18 April 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு