/* */

மதுக்கடையை மூடக் கோரி எமன், சித்ரகுப்தர் வேடமிட்டு பாஜக நூதன ஆர்பாட்டம்

காஞ்சிபுரத்தில் மதுக்கடையை மூட கோரி எமன், சித்ரகுப்தர் வேடமிட்டு நூதன முறையில் பாஜக வினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மதுக்கடையை மூடக் கோரி எமன், சித்ரகுப்தர் வேடமிட்டு பாஜக நூதன ஆர்பாட்டம்
X

சித்திரகுப்தர் எமன் மற்றும் மது பிரியர் வேடங்களில் குறுநாடகம் நடத்தி அரசு மதுபான கடையை மூட கோரி பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது

காஞ்சிபுரம் நகரில் மேட்டுத்தெரு, பேருந்து நிலையம் செங்கழுநீரோடை வீதி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகள் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருப்பதாகவும் பேருந்து நிலையம் அருகே உள்ள சித்ரகுப்தர் கோயில் அருகே பக்தர்களுக்கு பெரும் சிரமத்தை மதுபானக்கடை ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்பு புகார் வந்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ அன்பரசன் பொதுமக்களிடம் மனு வாங்கிய போதும் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டவுடன் இடம் மாற்றம் செய்ய அறிவுறுத்தினார்.

ஆனால் தற்போது வரை இடமாற்றம் செய்யப்படாத காரணத்தால் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் அதிசயம் குமார் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து மாவட்ட தலைவர் பாபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.


இதன்பின் சித்திரகுப்தர் , எமன் மற்றும் குடிமகன் ஆகிய மூன்று வேடமிட்ட நபர்கள் குடியினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அரசு மதுபான கடை விதிமீறல்கள் உள்ளிட்டவைகளை குறு நாடகமாக நடித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நகைச்சுவை கலந்த உள்ளூர் பாஷையில் சித்திரகுப்தன் எமன் உள்ளிட்டோர் பேசியது அவ்வழியே சென்ற அனைவரையும் ஒரு நிமிடம் நிற்க வைத்து பார்க்கும் படி செய்தது வரவேற்பை பெற்றுள்ளது

காஞ்சிபுரம் நகரில் உள்ள அனைத்து மதுபான கடைகளில் புறநகர் பகுதியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை நீண்ட நாட்களாகவே பல்வேறு தரப்பிலிருந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் டாஸ்மாக் நிர்வாகமும் ஒவ்வொரு முறையும் இது குறித்த புகாருக்கு பதில் அளிக்கையில் இடம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் மாற்றப்படும் எனவும் கூறி கடந்த ஓராண்டை தாண்டி தற்போதும் அதே பதில் மீண்டும் கூட்டங்களை தெரிவிக்கப்படுகிறது.

இது அனைவருக்கும் அதிர்ச்சியும் ஏமாற்றத்தையுமே அளிக்கிறது.

Updated On: 27 Feb 2023 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!