/* */

சரக்கில் தண்ணீர் என போதையில் ரசாயனம் கலந்து குடிந்தவர் பலி.

போதையில் தண்ணீர் என்று நினைத்து ரசாயன பொருளை ஊற்றி மது அருந்தியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது..

HIGHLIGHTS

சரக்கில் தண்ணீர் என போதையில் ரசாயனம் கலந்து குடிந்தவர் பலி.
X

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் அருகிலுள்ள காஞ்சிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் காளி வயது 63. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தினமும் பணி முடித்து விட்டு மது அருந்தி அருந்துவது வழக்கம் என கூறப்படுகிறது.

நேற்று வழக்கம் போல் பணி முடித்து விட்டு வீடு திரும்பிய காளி ஏற்கனவே அதிக மதுபோதையில் இருந்துள்ளார். மேலும் வீட்டில் மது அருந்துவதற்காக தண்ணீர் என்று நினைத்து துணி துவைக்க பயன்படும் ஆலா (ALA) என்னும் ரசாயனப் பொருளை மதுவுடன் சேர்த்து அருந்தி உள்ளார். இதில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சில மணி நேரத்தில் மயங்கியதாக தெரிகிறது.

இதனை கண்ட வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காளி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 12 April 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்