/* */

மருத்துவ காப்பீடு அட்டை வழங்க ஓய்வூதியர்களுக்கு பிரத்யேக இணைய தளம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் குறைகளை தெரிவிக்க பிரத்யேக இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மருத்துவ காப்பீடு அட்டை வழங்க ஓய்வூதியர்களுக்கு பிரத்யேக இணைய தளம்
X

காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில்  ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

ஓய்வூதியதாரர்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கடந்த 06.10.2022 அன்று நடைபெற்ற போது பெறப்பட்ட மனுக்கள் மற்றும் 30.05.2023 ஓய்வூதியதாரர்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி முதலில் விவாதிக்கப்பட்டது.

மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில் , பெறப்பட்ட அனைத்து மனுக்களின் மீதும் 15 நாட்களுக்குள் விரைவாக நடவடிக்கை எடுக்கவும், இது குறித்து முன்னேற்ற அறிக்கையினை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிடவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஓய்வூதிய கருத்துரு அனுப்புதல், ஊதிய நிர்ணயம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளை தொய்வின்றி செய்யும் வகையில் துறை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது.

ஓய்வூதியதாரர்களால் வழங்கப்படும் கோரிக்கை மனுக்களின் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.

ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையில் ஓய்வூதியதாரர் மற்றும் அவருடைய மனைவியின் புகைப்படத்துடன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, பதிலளித்த ஓய்வூதிய இயக்குநர் ஸ்ரீதர், மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவது தொடர்பாக பிரத்யேக இணையதளம் (portal ) தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.

இக்கூட்டத்தில் ஓய்வூதிய இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட கருவூல அலுவலர் அருள்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) புஷ்பா, அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 May 2023 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்