/* */

காஞ்சிபுரம் : ஊரடங்கு தினத்தில் விதி மீறியதாக 1024 வழக்குகள் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றைய ஊரடங்கு தினத்தில் பதிவான வழக்குகளில் இருந்து, ரூ 2,04,800/- ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : ஊரடங்கு தினத்தில் விதி மீறியதாக  1024 வழக்குகள் பதிவு
X

கோப்பு காட்சி

தமிழகத்தில், உருமாறிய கொரோனா பரவலை தடுக்க, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று மூன்றாவது முறையாக, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் தவிர திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு செல்லவும், விதிகளும் கூடிய தளர்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்தி பொதுமக்கள் வீதிகளில் திரிவதை கண்ட காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர், மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களை கொண்டு கண்காணிப்பை பலப்படுத்தினர். நகர் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய செயல்பட்டவர்கள் மீது, பராபட்சமின்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றைய ஊரடங்கு தினத்தில், மொத்தம் 1024 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன்மூலம் வழக்குகளில் இருந்து 2,04,800/- ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் தெரிவித்தார். அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து, உருமாறிய கொரோனா பரவலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 24 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்