/* */

அதிமுக உட்கட்ட தேர்தல்: முன்னாள் அமைச்சரிடம் போட்டியிட மனுக்கள் அளிப்பு

500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பேண்ட் வாத்தியங்குளுடன் ஊர்வலமாக வந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் மனுவை பெற்று சென்றனர்.

HIGHLIGHTS

அதிமுக உட்கட்ட தேர்தல்:  முன்னாள் அமைச்சரிடம் போட்டியிட மனுக்கள் அளிப்பு
X

வட்ட கழக தேர்தலில் போட்டியிட முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் இடமிருந்து ஜீ.தமிழரசன் விருப்ப மனு பெற்றபோது.

காஞ்சிபுரம் அதிமுக நகராட்சி, பேரூராட்சி, கிளைக் கழகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவிகளுக்கு உள்கட்சி தேர்தல் விருப்ப மனு வாங்க 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பேண்ட் வாத்தியங்குளுடன் ஊர்வலமாக வந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் மனுவை பெற்று சென்றனர்.

அதிமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்பு அதிமுக தலைமை அறிவித்திருந்தது. முதற்கட்டமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு பதவிகளுக்கும் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யாததால் இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்திய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் அறிவித்தார்.

இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிளைக் கழகம் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தலை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலத்தில் தொடங்கிவைத்தார். 19 மாவட்டங்களில் முதற்கட்டமாக இன்று தொடங்க உள்ள தேர்தல் நாளை வரை நடைபெற உள்ளது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுக நிர்வாகி பதவிகளுக்கு தேர்வு செய்ய உள்கட்சி தேர்தல் விருப்ப மனு அதிமுக ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் 14 வட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆதரவுடன் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து தனியார் திருமண மண்டபம் வரை பேண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக வந்து விருப்ப மனுக்களை பெற்று சென்றனர்.

இதில் ஏரளமான அதிமுக நிர்வாகிகள் போட்டியிட ஆர்வத்துடன் பங்கு பெற்று விருப்ப மனுவை பெற்று செல்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்சியின் அனைத்து பொறுப்புகளுக்கும் போட்டியிடுவார்கள். பெரும்பாலும் கட்சியின் பெரிய பதவிகளுக்குப் போட்டி இருக்காது என்றும், மாவட்டங்களில் தற்போது இருப்பவர்களே தேர்தலில் போட்டியின்றி வெற்றிபெற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்று நடைபெறவுள்ள தேர்தல் நிறைவடைந்தவுடன் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்கள்.

Updated On: 13 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்