/* */

100சதவீத பயணிகளுடன் இயங்கும் பேருந்துகள், தொற்று பரவும்அபாயம், கூடுதலாக இயக்க கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை, மாலை , வேளைகளில் 100 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளது. கூடுதலான பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

100சதவீத பயணிகளுடன் இயங்கும்  பேருந்துகள், தொற்று பரவும்அபாயம், கூடுதலாக இயக்க கோரிக்கை
X

 100 சதவீத பயணிகளுடன் இயங்கிய அரசு பஸ்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவானதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருந்து அரசு பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் வழிகாட்டு முறைகளை பின்பற்றி இயக்க தமிழக அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில் அரசு பேருந்துகள் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கியது.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் தொழிற்சாலைப் பணியாளர்கள் என பலர் செல்ல வேண்டிய நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இது போன்று கூடுதல் பேருந்துகள் இயக்கினால் மட்டுமே 50% பயணிகளுடன் அரசு வழிகாட்டு முறையின்படி பேருந்தில் தொற்று பரவாமல் பயணிக்கலாம் எனவும் தற்போது 100 சதவிகித பயணிகளுடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.

பேருந்தில் ஏற வேண்டாம் என பேருந்து நடத்துநர்களோ , பக்கத்தில் அமர வேண்டாம் என சக பயணிகளுக்கு கூற இயலாத நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பல பகுதிகளில் காலை மாலை வேளைகளில் பயணிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Updated On: 24 Jun 2021 1:45 PM GMT

Related News