/* */

மணிமுக்தா அணையில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மணிமுக்தா அணையில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
X

மணிமுக்தா அணை.

கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியின் குறுக்கே மணிமுக்தா அணை உள்ளது. இந்த அணைக்கு கல்வராயன்மலை பகுதியில் பெய்யும் மழை நீர், மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக வருகிறது. மேலும், மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையும் அணைக்கு நீர்வரத்தாக உள்ளது.

இந்த அணையில் சேமிக்கப்படும் நீரின் மூலம் சுற்று வட்டாரத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் திறப்பதன் மூலம் பழைய பாசனத்தைச் சேர்ந்த 1,243 ஏக்கர், புதிய பாசனத்தைச் சேர்ந்த 4,250 ஏக்கர் என மொத்தம் 5,493 ஏக்கர் பரப்பிலான விளை நிலங்கள் பயன்பெறுகிறது.

ஆற்றில் உள்ள 4 அணைக்கட்டுகள் மூலம் பல்லகச்சேரி, சித்தலுார், உடையநாச்சி, கூத்தக்குடி ஆகிய ஏரிகள் நிரம்பும். மேலும், கொங்கராபாளையத்தில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் உயரத் துவங்கியது. 36 அடி கொண்ட அணையின் மொத்த கொள்ளளவான 736.96 மில்லியன் கனஅடியில், தற்போது, 34 அடி உயர்ந்து 590 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது.

அணைக்கு விநாடிக்கு 130 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்ததால், பாதுகாப்பு கருதி புதிய ஷெட்டர் வழியாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அப்படியே திறக்கப்பட்டது.

கடந்த ஆண்டைப் போல தற்போதும் மணிமுக்தா அணை விரைவில் நிரம்பியதால் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், கனமழை பெய்ய இருப்பதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மணிமுக்தா ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் அதிகளவு தண்ணீர் திறக்கப்படும்.

இதனால், ஆற்றின் கரைப்பகுதியை ஒட்டியவாறு விளைநிலம் வைத்துள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளை கரைப்பகுதியில் கட்ட வேண்டாம். சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை குளிப்பதற்காக ஆற்றுக்கு அனுப்ப வேண்டாம் என சுற்று வட்டார கிராமங்களில் வருவாய்துறை சார்பில் 'தண்டோரா' மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 8 Nov 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!