/* */

சின்னசேலம் பகுதி ஏரிகளில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு

சின்னசேலம் பகுதி ஏரிகளில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

சின்னசேலம் பகுதி ஏரிகளில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு
X

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள ஏரிகளை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் கோமுகி அணை, அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால், பாதுகாப்பு கருதி, அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சின்னசேலம் தாலுகாவில் உள்ள 115 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடத்துார் மற்றும் 50 ஏக்கர் பரப்பளவுள்ள தெங்கியாநத்தம் ஏரிகள், முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

இந்த ஏரிகளை, கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அப்போது, ஏரி கரைகளின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். ஆய்வின்போது, சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, ஒன்றிய துணை சேர்மன் அன்பு மணிமாறன், பொதுப்பணி துறை அலுவலர் பிரபு, பி.டி.ஓ., துரைசாமி, தாசில்தார் அனந்தசயனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 10 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்