/* */

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்: வணிகர் சங்கம்

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிப்பு.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்: வணிகர் சங்கம்
X

திண்டுக்கல்லில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு வணிகர்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தது வரவேற்கத்தக்கது. வணிகர்களை உறுப்பினராக சேர்க்க மாநிலம் முழுவதும் எங்களது அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற 24-ஆம் தேதி ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட உள்ளனர்.

கொரோனா காலத்தில் வியாபாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அரசு அதிகாரிகள் வரி வசூலில் வியாபாரிகளிடம் அச்சுறுத்தல் செய்யக்கூடாது. தொழில் வரி வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். திண்டுக்கல் பஸ் நிலையம், காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளுக்கு நியாயமான வாடகையில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். கொரோனா காலம் என்பதால் வாடகையை தள்ளுபடி செய்யவேண்டும்.

மேலும், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளின் வாடகைகளை வியாபாரிகள் பாதிக்காத வகையில் தள்ளுபடி செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் விலை ஏற்றத்தால் பொருட்களின் விலை உயருகிறது. சாதாரண மக்கள் முதற்கொண்டு அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மாநில அரசு அழுத்தம் தரவேண்டும்.விலையை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். விவசாய பட்ஜெட் வரவேற்கத்தக்கதாக உள்ளது. இதுகுறித்து முதல்வரை நேரில் சந்தித்து எங்கள் சங்க அமைப்பு நிர்வாகிகள் நேரில் பேசி கோரிக்கை வைக்க உள்ளார்கள் என்று தெரிவித்தார்.

பேட்டியின் போது திண்டுக்கல் தொழில் வர்த்தக சங்க செயல் தலைவர் ஆனந்தம் நடராஜன், மாவட்ட தலைவர் கிருபாகரன், மாவட்ட செயலாளர் மங்களம். அழகு, செய்தி தொடர்பாளர் நசீர் சேட் மற்றும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 19 Aug 2021 10:11 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்