/* */

திண்டுக்கல்லில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்.

திண்டுக்கல்லில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று தீவிரமடைந்து இதனையடுத்து தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டது. தற்பொழுது தமிழகத்தில் தொற்று தீவிரம் குறைந்ததையடுத்து.

தமிழக அரசு படிப்படியாக தளர்வுகள் அறிவித்து வருகிறது இதன் ஒரு கட்டமாக வருகின்ற ஐந்தாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது இதனையடுத்து திண்டுக்கல்லில் உள்ள அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவிலில் உள்ள தூண்கள் மற்றும் தரைகள் ஆகியவற்றை தண்ணீர் அடித்து ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர் மேலும் கோவிலில் உள்ள அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று சாமி தரிசனம் செய்யும் வகையில் பெயிண்டால் வட்டங்கள் போடப்பட்டுள்ளது மேலும் ஆங்காங்கே முக கவசம் அணியுங்கள் சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் கைகளை அடிக்கடி கழுவுதல் என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டப்பட்டுள்ளது 5-ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது இதேபோல் அறநிலையத் துறைக்கு சொந்தமான அனைத்து கோயிலுக்கும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

Updated On: 3 July 2021 2:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?