/* */

இரண்டாவது நாளாக தத்தளிக்கும் செங்கல்பட்டு நகரம்: மீளா துயரத்தில் மக்கள்

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி இரண்டாவது நாளாக செங்கல்பட்டு நகர மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

இரண்டாவது நாளாக தத்தளிக்கும் செங்கல்பட்டு நகரம்: மீளா துயரத்தில் மக்கள்
X

மழை வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் செங்கல்பட்டு நகர மக்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் இன்றும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக செங்கல்பட்டு நகர பகுதியில் பெய்த கனமழை காரணமாக செங்கல்பட்டு மதுராந்தகம் முக்கிய ஜிஎஸ்டி சாலையில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் வரதராசனார் வீதி வேதாசலம் நகர் ராட்டின கிணறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இராட்டினகிணறு பகுதியில் இருந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வரை செல்ல கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வருடாந்திர தோறும் சிறு மழைக்கே செங்கல்பட்டு நகர பகுதிகளில் வடிகால் வாரி இல்லாத காரணமாக மழை நீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைகின்றனர். எனவே வடிகால்களை உடனடியாக தூர்வாரி வெள்ளநீர் வடிவதற்கான வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  4. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  5. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  6. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  7. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  9. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  10. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...