/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 155.7 மி.மீ. மழை பதிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பரவலாக 155.7 மி.மீ. மழை பெய்துள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 155.7 மி.மீ. மழை பதிவு
X
செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை( பைல் படம்)

செங்கல்பட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 155.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதன்படி செங்கல்பட்டில் நேற்று இரவு மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது.

மழை காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்..(மில்லி.மீட்டரில்)

திருப்போரூர்-45.4, மி.மீ, செங்கல்பட்டு-10 மி.மீ, திருக்கழுக்குன்றம்-8.2 மி.மீ, மாமல்லபுரம்-7.4 மி.மீ, மதுராந்தகம்-22 மி.மீ, செய்யூர்-17 மி.மீ, தாம்பரம்-19.5 மி.மீ, கேளம்பாக்கம்- 26.2 மி.மீ மழை என மாவட்டத்தில் மொத்தம் 155.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்தள்ளது.

Updated On: 28 Aug 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  2. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  3. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..
  7. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  8. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை