/* */

போதை மறுவாழ்வு மையத்தில் மத்திய இணை அமைச்சர் குமாரிபிரதீமாபூமிக் ஆய்வு

மதுமட்டுமே வாழ்க்கை அல்ல சமூகம் மற்றும் சமுதாயவளர்ச்சிக்கு இளைஞர்களின்பங்கு முக்கியமானதுஎன்றார் அமைச்சர்

HIGHLIGHTS

போதை மறுவாழ்வு மையத்தில் மத்திய இணை அமைச்சர் குமாரிபிரதீமாபூமிக் ஆய்வு
X

அரியலூர் போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சர் குமாரிபிரதீமாபூமிக் 

அரியலூர் – மது மட்டுமே வாழ்க்கை அல்ல சமூகம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு முக்கியமானது என போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சர் குமாரி. பிரதீமா பூமிக் தெரிவித்தார்.

அரியலூரில் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த மது போதை மறுவாழ்வு மையத்தினை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணை அமைச்சர் குமாரி.பிரதீமா பூமிக் ஆய்வு செய்து, மையத்தின் செயல்பாடுகள், அளிக்கப்படும் சிகிச்சைகள், உணவு முறைகள் குறித்து கேட்டறிந்தார். மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் கூறியதாவது: அப்பொழுது போதை மட்டுமே வாழ்க்கை அல்ல. போதை பழக்கத்தால் குடும்பம் மற்றும் சமூகத்தால் நாம் ஒதுக்கி வைக்கப்படுகிறோம். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் போதை பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். சமுதாய மற்றும் சமூக வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் மறுவாழ்ழு சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வெளியே செல்லும்போது சமுதாய மற்றும் குடும்பத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றுபவர்களாக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நல்லவர்களோடு பழக வேண்டும் நல்லதை கற்றுக் கொள்ள வேண்டும். நல்லதை செய்ய வேண்டும் எனக் கூறினார்.

Updated On: 8 Oct 2022 9:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது