/* */

திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வினியோகம்

திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வினியோகம்
X

திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.


இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட கிளை சார்பில், திருமானூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, அங்கு வரும் நோயாளிகள் பெரிதும் பயன்பெறும் வகையில், இந்தியன் ரெட் கிராஸ் மாநில அமைப்பில் இருந்து பெறப்பட்ட, சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். ஒன்றிய உயர் மட்ட குழு உறுப்பினர்கள் அகஸ்டின், மங்களராஜ், நிர்வாக குழு உறுப்பினர்கள் முருகானந்தம், அமலன் அந்துவான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிர்வாக குழு உறுப்பினர் கோவிந்தம்மாள் வரவேற்றார்.

தெர்மல் ஸ்கேனர் 1, இரத்த அழுத்தம் பார்க்கும் கருவி 3, பல்ஸ் ஆக்சிமீட்டர் 3, கண்ணாடி முக கவசம் 10, I V ஸ்டேண்ட் 1, மருத்துவ தள்ளுவண்டி1, தெர்மோமீட்டர்10, கையுறைகள்10, கட்டில், மெத்தை, தலையணை மற்றும் மெத்தை விரிப்பு 1செட் ஆகிய பொருட்கள், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.முபாரக்கிடம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளை துணை தலைவர் செல்வராஜ், பொருளாளர் எழில், செயலாளர் ஸ்டீபன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், நிர்வாக குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், முன்னாள் தலைவர் நல்லப்பன், துணை தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் குணசேகரன், திருமானூர் லயன்ஸ் சங்க தலைவர் சுரேஷ்குமார், சாசன தலைவர் பாஸ்கர், கணேசன் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிபொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், வட்டார பொருளாளர் பாஸ்கரன் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தியன் ரெட் கிராஸ் நிர்வாக குழு உறுப்பினர் ராஜலெட்சுமி நன்றி கூறினார்.

Updated On: 14 Nov 2021 8:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது