/* */

தொடர் கனமழை: அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சராசரியாக 578.3 மில்லிமீட்டர் மழை என்பது, 20 தினங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் 613.38 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது

HIGHLIGHTS

தொடர் கனமழை: அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
X

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர்ந்து பலமுறை மணிக்கணக்கில் கொட்டித் தீர்த்த கனமழையால், வெள்ளநீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஓடியது.

நேற்று பெய்த கனமழையில் அரியலூரில் 14.8மி.மீ, திருமானூரில் 9.2மி.மீ, செந்துறையில் 23.4மி.மீ, ஜெயங்கொண்டம் 25 மி.மீ ஆண்டிமடம் 13மி.மீ, என மாவட்டம்முழுவதும் 85.4மி.மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் பெய்யும் சராசரி மறைவான 230 மில்லி மீட்டர் என்பதை கடந்த 18 தினங்களில் மட்டும் 337.5 மில்லிமீட்டர் மழை பதிவாகி இம்மாத ஒட்டுமொத்த மழையை 18 தினங்களில் அரியலூர் மாவட்டம் பெற்றுள்ளது.

இதுபோன்று அரியலூர் மாவட்டத்திற்கு இரண்டு மாதங்களில் பெய்யவேண்டிய வடகிழக்கு பருவமழை சராசரியாக 578.3 மில்லிமீட்டர் மழை என்பது, 20 தினங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் 613.38 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

தொடரும் கனமழையால் அரியலூர் மாவட்டத்தில் 4 வீடுகள் முழுவதும்,136 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளது.

பள்ளி மாணவர்களின் சிரமம் கருதி, இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்திரவிட்டுள்ளார்.

Updated On: 19 Nov 2021 2:46 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை