/* */

அரியலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணி குறித்து ஆலோசனைக் கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணி குறித்து ஆலோசனைக் கூட்டம்
X

அரியலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.என்.பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.


அரியலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணித்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில், மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.என்.பூங்கொடி தலைமையில் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் நகராட்சி, ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம் பேரூராட்சி மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 அன்று நடைபெற்றது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திலும், ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளைய தினம் (22.02.2022) அரியலூர் நகராட்சி அலுவலகம் மற்றும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறவுள்ளது. அந்த வகையில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது, மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் கண்காணித்தல் தொடர்பாக வட்டார பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள், தபால் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில், மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.என்.பூங்கொடி தலைமையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுக்கு விளக்கமாக எடுத்தரைக்கப்பட்டது. இதில் வாக்கு எண்ணிக்கை துவக்கம், வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கும் வழிமுறைகள், தொலைபேசி உள்ளிட்ட உபகரணங்களை தடை செய்தல், தபால் வாக்குகள் எண்ணிக்கை, தேர்தல் முடிவுகளை அறிவித்தல், மருத்துவக்குழு அமைத்தல், வாக்கு எண்ணும் பணிக்கு கூடுதலாக அலுவலர்களை தயார் நிலையில் வைத்திருத்தல், தடையற்ற மின்சாரம், ஜெனரேட்டர் வசதி, கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுதல், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணிக்கையை முழுவதுமாக கண்காணித்தல், பாதுகாப்பு வசதிகள், உணவு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போன்ற பல்வேறு வசதிகள் குறித்தும் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் விளக்கமாக எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விதிமுறைகளின்படி, வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையை உரிய விதிமுறைகளின்படி மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.என்.பூங்கொடி அறிவுறுத்தினார்;.

பின்னர், அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, செய்தியாளர்களை சந்தித்தார். அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகள், உடையார்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அரியலூர் நகராட்சி அலுவலகம் மற்றும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை உள்ளிட்ட வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை 24 மணிநேரமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளைய தினம் (22.02.2022) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

அரியலூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் 4 மேசைகளில் 9 சுற்றுகளாகவும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் பதிவான வாக்குகள் 3 மேசைகளில் 7 சுற்றுகளாகவும், உடையார்பாளையம் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் 1 மேசையில் 14 சுற்றுகளாகவும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் பதிவான வாக்குகள் 1 மேசைகளில் 15 சுற்றுகளாகவும் என ஆகமொத்தம் 9 மேசைகளில் 45 சுற்றுகளாக வாக்குகள் எண்ணி முடிக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நாளைய தினம் (22.02.2022) அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு சில்லறை மனுபான கடைகள் மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுக்கூடம் ஆகியவற்றிற்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வாக்கு எண்ணிக்கையை சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என செய்தியாளர்களிடம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், திட்ட அலுவலர் (மகளிர்திட்டம்) சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 21 Feb 2022 3:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  2. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  3. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  7. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  10. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு